Sri Lanka

EPDP நெப்போலியனிற்கு வருமா ஆப்பு

2001ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைத் தாக்கி இரண்டுபேர் பலியான சம்பவம் தொடர்பான விசாரணை நேற்றைய தினம் (திங்கட்கிழமை) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றது.

இதன்போது, தாம் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஊர்காவற்றுறை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த நெப்போலியன் தலைமையிலான குழுவினர் தம்மீது தாக்குதல் நடாத்தியதாக சிவாஜிலிங்கம் சாட்சியமளித்தார்.

குறித்த தாக்குதலின்போது அக்கட்சியைச் சேர்த ஜீவன் இரும்புக் கம்பியால் தனது தலையில் தாக்கியதாக மாவை சேனாதிராஜா சாட்சியமளித்ததுடன், நெப்போலியன் என்பவர் தன்னை வெட்டியதாக சிவாஜிலிங்கம் சாட்சியமளித்தார்.

அதன்பின்னர் நெப்போலியனின் உத்தரவுக்கமைய துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டதாகவும் அதில் இருவர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் காயமடைந்ததாகவும் இருவரும் சாட்சியமளித்தனர்.

அத்துடன் சம்பவத்தில் கொல்லப்பட்ட ஒருவரையும், தன்னையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ரவிஜாஜே தனது வாகனத்தில் ஏற்றி யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணை மீண்டும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Most Popular News