Sri Lanka

மஹிந்தானந்தவை மீண்டும் சிறையில் போடுங்கள்: நாடாளுமன்றில் கோஷம்

தற்போதைய அரசின் அமைச்சர்களுக்கு எதிராக போலியான முறைப்பாட்டைச் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து, அவரை சிறையில் அடைக்கவேண்டும் என்று பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சு மீதான வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“டொப் – 10” எனறு தற்போதைய அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே சாட்சியமற்ற முறைப்பாட்டை செய்தார்.

நீதிமன்றில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வழக்குப் பதிவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறான முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ளமை வியப்புக்குரியதாகும். ஊழல் மோசடி தொடர்பில் இவர் மீது பல முறைப்பாடுகள் உள்ளன எனவும் இதன் போது அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

சட்ட விதிமுறைகளின் பிரகாரம் போலியான முறைப்பாட்டை தாக்கல் செய்தால் குறித்த முறைப்பாட்டாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கமைய “டொப் 10” எனும் பெயரில் போலியான முறைப்பாட்டை தாக்கல் செய்தமைகாக்காக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து அவரை சிறையில் அடைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Most Popular News