Sri Lanka

எதிர்வரும் இரு தினங்களில் வானிலையில் மாற்றம்…

நாட்டின் தென்கிழக்கு பகுதியின் பொத்துவில்லில் இருந்து சுமார் 750 கிலோமீற்றர் தூரத்தில் வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வருவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அது உயர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென் இந்தியாவை நோக்கி நகரக்கூடும் என எதிர்ப்பார்ப்பதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் தாக்கம் காரணமாக எதிர்வரும் இரண்டு தினங்களில் நாட்டை சுற்றி வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் , விடடு விட்டு கடும் காற்று வீசக்கூடும் என வானிலை அவதான நிலையில் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Most Popular News