Sri Lanka

உலக மக்களின் அனுதாபத்தை பெற்ற சிறுமி காலமானார்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உலக மக்களின் அனுதாபத்தை பெற்றிருந்த பிரித்தானிய சிறுமி உயிரிழந்துள்ளார்.

பேஸ்புக் மூலம் பிரபலமான குறித்த சிறுமியின் இறுதி சடங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Jessica Whelan என்ற குறித்த சிறுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படமொன்றை அவரது தந்தை பேஸ்புக்கில் பதிவேற்றியிருந்தார்.

அதனை தொடர்ந்தே இவரது நிலை தொடர்பில் உலக மக்களின் கவனம் திரும்பியது.

எவ்வாறாயினும் , கடந்த ஒரு வருடக்காலமாக சிகிச்சை பெற்று வந்த குறித்த சிறுமி கடந்த 20ம் திகதி உயிரிழந்தார்.

இளஞ்சிவப்பு நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட சிறிய பெட்டியில் அவரது உடலம் வைக்கப்பட்டிருந்ததாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே…baby baby01 baby02 baby03 baby04 baby05 baby06

Most Popular News