Sri Lanka

புலிகளுக்கு எதிரான வெள்ளிமலையின் டங்குவார் டர்…..

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது தனியே ஆயுதம் ஏந்தி, பொழுது போக்கிற்காக போராடிய அமைப்பல்ல. இன்று பலரின் கருத்துக்கள், புலிகளையும், அதன் தலைமையையும், விமர்சனம் என்ற போர்வையில் கருத்துச் சொல்லிக் கொண்டிருப்பது அந்த அமைப்பை இழிபடுத்துவது மட்டுமல்லாமல், போராட்டத்தினை கொச்சைப்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது.

யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் போராட்டத்தி்ல் களப்பலியான மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான வாய்ப்புக் கிட்டியிருக்கிறது.

பிள்ளைகளை மண்ணுக்காக கொடுத்த பெற்றோர் கதறி அழுது, அவர்களின் நினைவை விளக்கேற்றி பூசிக்கும் இந்த தருணத்தில் சில விசமிகளின் பேச்சுக்கள் தாயக வீரர்களை காயப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

குறிப்பாக புலிகள் மட்டும்தான் மாவீரர்கள் என்பது பொருத்தமற்ற கருத்து என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்திருக்கிறார்.

இவரின் இந்த கருத்தை எவ்வாறு வரையறுத்துக் கொள்வது என்றே புரியாமல் இருக்கிறது.

விடுதலைப் புலிகளின் தலைவர் எவ்வாறு மண்ணை மீட்பது பற்றிச் சிந்தித்தாரோ அவ்வாறே தமிழ் மக்களின் பண்பாடு, கலைச்சாரம் தொடர்பில் அதிகம் அக்கறை கொண்டிருந்தார்.

அதற்கான சான்றுகள் தான் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த தனித்தனி பொறுப்பாளர்கள். கலைக்கு, கல்விக்கு, அரசியலுக்கு, நீதிமன்றங்களுக்கு, காவல்த்துறைக்கு என்று அவர் ஒரு குட்டி அரசையும், குட்டி இராஜ்ஜியத்தையும் அமைத்திருந்தார்.

அதுமட்டுமல்ல, தமிழின் அர்த்தங்களும், தமிழ்ச் சொற்களின் பொருள் மீதும் அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. போரில் களத்தில் வீரச்சாவினை அடைந்தவர்கள் தான் மாவீரர்கள். அந்த வகையில் நான் மாவீரன் அல்ல என்று ஒரு முறை சொல்லியும் இருக்கிறார்.

மாவீரர்கள் என்பவர்கள், இனத்தின் விடுதலைக்காக போரில் களப்பலி அடைந்தவர்களே. தவிர, விடுதலை் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்தியவர்கள், மண்ணிற்காகவும், பண்பாட்டிற்காகவும் உழைத்தவர்களுக்கு மாமனிதர்கள் என்றும் அவர்களின் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு விடுதலைப் புலிகள் தங்களின் கௌரவத்தை அவர்கள் வழங்கியிருக்கின்றார்கள்.

ஆனால், கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் பேச்சு சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.

ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு பற்றியும், அதன் கொள்கைகள் நிலைப்பாடுகள் தெரியாத அடிமுட்டாள்த்தனமான கருத்துக்கைத் தெரிவிப்பது இழுக்கான செயல் என்று அவர் சிந்திக்க வாய்ப்பில்லை.

ஏனெனில், கடந்த 2002ம் ஆண்டு சமாதான ஒப்பந்த காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், அன்றைய ஜனாதிபதி சந்திரிக்காமல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட வேளை, நாடாளுமன்றப் பதவியியை இழக்க நேர்ந்திருந்தது.

அடிப்படையில் புலி எதிர்ப்புவாதியான இவர், தன்னை தமிழினப்பற்றாளனாகக் காட்டிக் கொண்டு தன்னுடைய சுயநல அரசியலுக்காக தமிழ் மக்களையும், புலிகளையும் இன்று பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இவர், புலிகளோடு முரண்பட்டுக்கொண்டு, இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தவர் தான். புலிகளை ஆரம்ப காலங்களில் எதிர்த்துப் பேசியவர்களின் இவரும் ஒருவர் தான். ஆனால் இன்று மாவீரர் நாளை அனைவருக்குமானதாக அனுஷ்டிக்க வேண்டும் என்று கூறுவது எவ்வளவு வேடிக்கையான விடையம் என்பதை அவருக்கு தெரியவில்லை.

என்ன செய்வது, எதை எப்படிப் பேச வேண்டும் என்பதற்கு அடிப்படைத் தகுதியேனும் இருந்திருக்க வேண்டும். ஒரு பேருந்து ஓட்டுநரான இவர், புலிகள் பற்றியும் அந்த அமைப்புப் பற்றியும் தெளிவான பார்வை கொண்டிருக்க வாய்ப்பில்லை.

ஒருமுறை வாழைச்சேனையில் கலவரம் ஏற்பட்டிருந்த வேளை, அப்போதைய அமைச்சர் மிலிந்த மொறகொடவுடன் கலவரப்பகுதிக்குச் சென்று இருந்தார். அப்போது மக்கள் கலவரம் குறித்து கேள்வி எழுப்பியிருந்த வேளை, மின்வெட்டுத் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அதிமேதாவி இன்று மாவீரர் தினம் பற்றி பேசுவதற்கு என்ன தகுதியிருக்கிறது என்பதை சிந்திக்க வேண்டியிருக்கிறது.

ஒரு உண்ணதமான, புனிதமான, தமிழ் மக்களின் காவல்த் தெய்வங்களை பூசிக்க வேண்டிய தினத்தினை பொதுவான ஒரு நிகழ்வாக மாற்றவேண்டும் என்று கூறுவதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட வேளை, பதவியை இழந்த இவர், மீண்டும் ஆனந்த சங்கரியோடு இணைந்து கிழக்கின் மாகாண சபை உறுப்பினர் என்னும் பதவியை கையில் வைத்துக் கொண்டு தன்னை ஏதோ தமிழ் மக்களினதும், விடுதலைப் போராட்ட விரும்பியாக காட்டிக் கொள்ள நினைப்பதை நினைக்கும் போது இவரைப் போன்ற மனிதர்கள் தமிழர்களுக்கு கிடைத்தது பெரும் சாபக்கேடு என்றே தோன்றுகிறது.

புனித நாட்களையே எவ்வாறு பார்ப்பது என்பதைக் கூட தெரியாத இவர் போன்ற மனிதர்கள் தமி்ழ் மக்களுக்கு அரசியல்வாதிகளாக இருப்பதானால் தான் என்னமோ எமக்கான சுதந்திரத்தில் தடையேற்பட்டுக் கொண்டிருக்கிறது.

இவர் போன்ற குப்பைகளை மக்கள் அகற்றுவது இனிவரும் காலங்கள் தமிழ் அரசியல் பரப்பில் மாற்றத்தைக் கொண்டுவரும். களைகள் அகற்றப்படவேண்டுமே தவிர வளர விடக்கூடாது. தமிழர்களை அழிப்பதற்கும், எங்கள் பண்பாட்டையும், கோட்பாடுகளையும் சிதைப்பதற்கு கிருஸ்ணப்பிள்ளை போன்ற நபர்கள் போதும்.

விடுதலைப் போராட்டமும், அரசியலும் பஸ் ஓட்டுவதைப் போன்றதல்ல. அது இராஜதந்திர மற்றும் உணர்வு, தியாகங்களைக் கொண்டு கட்டியமைக்கப்பட்டது என்பதை இவர் புரிந்துகொள்ள வேண்டும்.

வரும் தேர்தலில் ஆனந்தசங்கரி கூட்டமைப்பில் இல்லாததால் ஆயுதக் குழுக்கள் மூலம் மாகாணசபை ஆசனத்தை ஏப்பமிட அத்திபாரம் இட்டுள்ளார் அதன் ஆரம்பம் தான் இது.

வடக்குத் தவிர்ந்த கிழக்கில் கிழக்கு மாகாண சபை பிரதி அவைத் தலைவர் பிரசன்னா இந்திரகுமார் தவிர்ந்த மாகாண சபையில் பங்கெடுக்கும் ஏனைய ஆயுதக் குழுக்களின் உறுப்பிணர்கள் யாரும் மாவீரர்களுக்காக ஒரு சுடர் கூட ஏற்ற வில்லை அதன் விபரம் விரைவில் புலிகளை அழித்த ஆதாரத்துடன்….

Most Popular News