Sri Lanka

முன்னாள் போராளிகள் மூவர் சமூகத்துடன் இணைப்பு..!!

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒருவருட புனர்வாழ்வு பயிற்சியினை நிறைவு செய்த மூவர் 29.11.2016 காலை 10மணியளவில் சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர்.

புனர்வாழ்வு நிலையத்தில் பல கைத்தொழிற் பயிற்சிகளை நிறைவு செய்த 15 முன்னாள் போராளிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் குமார (கொழும்பு மோதர) சிங்கராசா எட்மன் (நிலாவெளி, திருகோணமலை) செல்வரட்ணம் சிறீதரன் (கூமாங்குளம்,வவுனியா) ஆகிய மூவரே சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர்.

சிங்கள இளைஞர் ஒருவரும் முன்னாள் விடுதலைப்புலிகளில் இணைந்து செயற்பட்டிருந்ததினால் ஆறுமாதகால புனர்வாழ்வின் பின்னர் இன்று சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தகக்கது.

நிகழ்வில் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளியான கஜதீபன் பாடலொன்றை பாடியிருந்தார்.
dsc_0154-1

dsc_0170-1

dsc_0172

dsc_0218

dsc_0220

Most Popular News