Sri Lanka

மலேசியாவில் 16 இலங்கையர்கள் கைது!

மலேசியாவில் இரண்டு சம்பவங்களில் 16 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கடந்த இரண்டு நாட்களில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

மலேசிய இபோஹ் என்ற இடத்தில் உள்ள மருந்துக்கலவை ஆய்வுக்கூடங்களில் பணியாற்றியமூன்று இலங்கையர்கள் உட்பட்ட 5 வெளிநாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இதன்போது குறித்த ஆய்வுக்கூடத்தில் இருந்து 1.2மில்லியன் ரிங்கிட் பெறுமதியான கஞ்சாஉட்பட்ட மருந்துப் பொருட்கள் மீட்கப்பட்டன.

இந்தநிலையில் இலங்கையர்கள் மூவர் உட்பட்ட 5 வெளிநாட்டவர்களும் எதிர்வரும் 7நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதேவேளை, மலேசியாவின் டிக்சென் துறைமுகப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டசுற்றிவளைப்பின் போது 13 இலங்கையர்கள் உட்பட்ட 900 பேர் வரை கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் வீசா முடிவடைந்த நிலையில் மலேசியாவில் தங்கியிருந்த குற்றத்துக்காககைது செய்யப்பட்டனர்.

அத்துடன் மலேசியாவில் தங்கியிருப்பதற்கான ஆவணங்கள் எவையும் அவர்களிடம்இருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular News