Sri Lanka

ஏறாவூர் இரட்டைப் படுகொலைச் சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

ஏறாவூர் இரட்டைப் படுகொலை சந்தேகநபர்கள் ஆறு பேரையும் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக மாவட்ட நீதிபதி முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி உத்தரவிட்டுள்ளார்.

ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை சந்தேகநபர்கள் முன்னிலைப்படுத்தபட்ட நிலையில் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஏறாவூர் நகரபிரதேசத்தில் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்து வந்த தாயான நூர்முஹம்மது உஸைரா அவரது திருமணமாகிய மகளான ஜெனீராபானு மாஹிர் ஆகியோர் செப்ரெம்பர் மாதம் 11 ஆம் திகதி அதிகாலை படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலை பின் ஒழுங்கையைச் சேர்ந்த இஸ்மாயில் முஹம்மது பாஹிர், வசம்பு என்று அழைக்கப்படும் உஸனார் முஹம்மது தில்ஷான், கலீலுர் ரஹ்மான் அஹம்மது றாசிம், புஹாரி முஹம்மது அஸ்ஹர், இஸ்மாயில் சப்ரின், மற்றும் அபூபக்கர் முஹம்மது ஆகிய சந்தேகநபர்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளால் சந்தேகநபர்கள் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டு முன்னிலைப்படத்தபட்டவேளை வழமை போன்று நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.batti

batti01

batti02

Most Popular News