Sri Lanka

‘ஆவா’ சந்தேகநபர்களுக்கு பிணை: வெளிநாடு செல்லத் தடை

‘ஆவா’ குழுவினர் என சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டிருந்த 11 பேரும் கொழும்பு மேலதிக நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

யாழில் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர்கள், இன்று (புதன்கிழமை) கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது தலா ஒரு மில்லியன் பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டனர்.

அத்தோடு, குறித்த சந்தேகநபர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு தடைவிதித்த நீதவான், மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையிலும் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் யாழ்.கிளை அலுவலகத்திற்கு சமூகமளிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.

அண்மைய காலமாக யாழில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சம்பவங்களின் பின்னணியில் ஆவா எனப்படும் குழு செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இது குறித்து கடந்த மாதம் யாழில் நடத்தப்பட்ட தேடுதலில் குறித்த 11 பேரும் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.ava-suspects

Most Popular News