Sri Lanka

யாழில் சிறப்பாக பணியாற்றிய பொலிஸாருக்கு கௌரவம்

யாழில் சிறப்பாக சேவையாற்றிய பொலிஸாரை கௌரவிக்கும் நிகழ்வொன்று, யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ன மற்றும் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் செலசின்லாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறந்த சேவையாற்றிய பொலிஸாரை கௌரவித்ததோடு, பணப்பரிசில்களையும் வழங்கிவைத்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், பொலிஸ் துறையின் தாற்பரியத்தை விளக்கியதோடு, பொலிஸ் சேவையின் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு அதிகாரியும் சிறந்த சேவையை வழங்குவது அத்தியாவசியமானதென தெரிவித்த அவர், அவர்களுடைய சேவையின் அடிப்படையில் எதிர்காலத்தில் பணப்பரிசில் மட்டுமன்றி பெறுமதியான ஏனைய பல பரிசில்களையும் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார்.

img_5052

img_5051

img_5050

img_5049

img_5047

img_5046

img_5045

img_5044

img_5043

img_5041

img_5037

Most Popular News