Sri Lanka

கல்முனையில் மதுவில் மிதக்கும் கல்வி அதிகாரி!! கல்வி அமைச்சரே உடன் பாருங்கள்…

கல்வி என்பது ஒருவனுடைய அழிக்கமுடியாத பெரும் சொத்து அதனை பெற்றுக்கொள்வதற்காக அயராது பாடுபட்டு பட்டம் பெற்று சாதனை படைக்கின்றான்.

அவ்வாறு சுயமாக கற்று நேர்வழியில் பதவி உயர்வுகளுடன் இருப்பவர்களை ஓரங்கட்டிவிட்டு தனக்கு மதுப்போத்தலை வாங்கித்தருபவர்களுக்கு மாத்திரம் சகலவிதமான சலுகைகளையும் செய்யும் ஒரு கல்வி அதிகாரி கல்முனை வலயத்தில் இருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும் என வலயத்தின் கல்விப்புலத்தில் உள்ள உயரதிகாரி ஒருவர் கருத்துத்தெரிவித்தார்.

இவர் கல்முனை கல்வி வலயத்தில் நிருவாகப்பிரிவில் கல்வி அதிகாரியாக இருந்து கொண்டு தன்னுடன் மது அருந்தும் அதிபர்களையும், ஆசிரியர்களையும் தன்னுடன் வைத்துக்கொண்டு அவர்களுக்குத்தேவையான சகலவிதமானி உயர்வுகளையும், இடமாற்றங்களையும், அத்தோடு அதிபர்கள் தரம் இல்லாத சில ஆசிரியர்களை சில பாடசாலைகளுக்கு அதிபராக்கியதோடு மாத்திரம் அல்ல அவர்களுக்கும் இன்னும் சில பிரபல பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களுக்கும் அனைத்து விதமான பரீட்சை கடமைகளிலும் ஈடுபடுவதற்கான முழு உரிமையையும் வழங்கியிருப்பது ஏனைய ஆசிரியர்களின் மனங்களை புன்படுத்தி இருப்பதாக உயர் பதவிகளுடன் இருக்கும் முக்கிய சில புள்ளிகள் தங்களது ஆதங்கங்களை வெளியிட்டுள்ளார்கள்.

சமூகத்தால் ஒதுக்கப்பட்ட சிலரை இப்போதும் அதிபர்கள் என்ற அந்தஸ்த்துடனும், பரீட்சை மேற்பார்வையாளர்கள் என்ற அந்தஸ்த்துடனும் வைத்துக்கொண்டு இருப்பதானது கல்வி அதிகாரிக்கு உரிய ஒரு செயல் அல்ல என்பதுடன் தன்னுடன் மது அருந்தும் ஒரு சில ஆசிரியர்களின் உறவினர்கள் தன்னுடன் வேலை செய்கின்றார் என்ற காரணத்தினால் வலயத்தினால் கிடைக்கும் சகலவிதமான சலுகைகளையும் பெறுவதற்கும் உதவி செய்து வருகின்றார்.

கல்வி அமைச்சு கல்முனை வலயத்தில் அதிபர் வெற்றிடம் உள்ளதா என கேட்டால் அவ்வாறு இல்லை சகல பாடசாலைகளிலும் தரம் மிக்க அதிபர்களே உள்ளார்கள் என அமைச்சிக்கு அறிக்கை அனுப்புகின்றார் அவர்கள் யார் என்று பார்த்தால் அவருடன் சேர்ந்து மது அருந்துபவர்கள் என அண்மையில் அதிபர் தரத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அதிபர்கள் கவலை தெரிவிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இவர் உட்பட இவரது மதுப்பிரியர்களின் புகைப்படங்களை மிக விரைவில் தகுந்த ஆதாரங்களுடன் வெளியிட இருக்கின்றோம்…..

சமூக சீர்திருத்த மையம்
கல்முனை

Most Popular News