Sri Lanka

நாளைக்கு யாழ் பஸ் நிலையத்துக்கு ஓடுங்கள்!!

எயிட்ஸ் பரிசோதனை செய்யுங்கள் சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு ‘இன்றே பரிசோதியுங்கள் நாளைவரை காத்திருக்க வேண்டாம்’ எனும் கருப்பொருளிலின் கீழ் நாளை தினம் (வியாழக்கிழமை) யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் தொற்று நோய் மற்றும் தொற்றா நோய்கள் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளப்படவுள்ளது.

காலை 8.30 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரை இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன்போதான பரிசோதனைகளில் இரகசியம் பேணப்படும் என்று யாழ். போதனா வைத்தியசாலை பாலியல் தொற்று நோய்ப்பிரிவு வைத்தியர் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ‘யாழில் 1987ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டுவரை 80 பேருக்கு மேற்பட்டோர் எச்.ஐ.வி எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 40 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 2014ஆம் ஆண்டு முதல் 2016 வரை 26 பேர் இணங்காணப்பட்டுள்ளனர். அந்தவகையில் இவ்வருடம் யாழில் 7 பேர் எச்.ஐ.வி எய்ட்ஸ் நோய்த் தொற்றுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக இணங்காணப்பட்டுள்ளனர்.

எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் விரைவில் இணங்காணப்பட்டால் உயிர் ஆபத்தில் இருந்து காப்பாற்றுவதற்கான மருந்துகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

2030ஆம் ஆண்டை எச்.ஐ.வி தொற்று இல்லாமல் செய்வதற்காக பாலியல் தொற்று தடுப்பு பிரிவினர் செயற்பட்டு வருகின்றதாகவும்’ அவர் மேலும் குறிப்பிட்டார்.

Most Popular News