Sri Lanka

பேஸ்லைன் வீதியினை காலிவீதி வரைக்கும் நீடிக்க நடவடிக்கை

மேல்மாகாண பாரிய அபிவிருத்தி உபாய முறைத்திட்டத்தின் கீழ் பேஸ்லைன் வீதியினை காலிவீதி வரைக்கும் நீடிப்பதற்கும், 120 பஸ் வீதியினை பாமங்கடை பாலத்திலிருந்து டபிள்யூ ஏ. சில்வா மாவத்தை வரை விரிவுபடுத்தவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவையின்பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்:-

மேல்மாகாண வலயத்தில் பாரிய நகர அபிவிருத்தி தொடர்பில் இனங்காணப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை முன்னெடுக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. அதன்படி பேஸ்லைன் வீதியினை காலிவீதி வரைக்கும் நீடிக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் பொலதுவ – கொஸ்வத்த வீதியை கொலன்னாவை ஊடாக களனிவரை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 120 பஸ் வீதியினை பாமங்கடை பாலத்திலிருந்து டபிள்யூ ஏ சில்வா மாவத்தை வரை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கொஹ்வலை முச்சந்தி சூழல் மற்றும் கார்சல் வைத்தியாலை வரை அமைந்துள்ள புகையிரத நிலையங்களுக்கு அருகில் புதிய மேம்பாலங்கள் நிர்மாணிக்கப்படும்.

களனி பாலத்திலிருந்து ஒருகெடைவத்தை ஊடாக ராஜகிரியவரை ஓடக்கூடிய மேம்பாதையினை பத்தரமுல்லை நிர்வாக நகரத்தை உள்ளடக்கும்வகையில் வெளிச்சுற்றுவட்டம் வரை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

Most Popular News