Sri Lanka

தப்பியோடிய குடு பேபி யாழ். பேருந்து நிலையத்தில் மீண்டும் சிக்கினார்

குடு பேபி யாழ்.நீதிமன்றில் இருந்து தப்பியோட்டம் பொலிஸார் வலை வீசி தேடுதல் நடாத்திய வேளையில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் 180 மில்லி கிராம் குடுவுடன் குடு பேபி என அழைக்கப்படும் கரிகாலன் யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வைத்து கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவற்காக யாழ்.நீதிமன்ற சிறைக் கூடத்தில் இருந்து மன்றிற்கு அழைத்துச் செல்லும் சிறு தூரத்தில் பொலிஸாரிடம் இருந்து இன்று (புதன்கிழமை) தப்பிச் சென்றார்.

இதனையடுத்து பொலிஸார் தேடுதலை மேற்கொண்ட போது, குறித்த நபர் மாலை 4 மணியளவில் யாழ். மத்திய பேருந்து தரிப்பிடப்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரை மீண்டும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Most Popular News