Sri Lanka

கருணாவிடம் ஏனைய விசாரணைகளும்

கருணா அம்மான் தொடர்பில் வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து மஹிந்த அணியுடன் இணைந்து கொண்ட முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மானின் கைது தொடர்பிலும் அவர் மீது உள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் ஊடகவியலாளர்களால் கேள்விகள் எழுப்பட்டன. இதற்கு பதில் வழங்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டிருந்தார்.

கருணா அம்மான் கைது செய்யப்பட்டமை பெரிய குற்றத்திற்காக அல்ல. அவர் அரச வாகனத்தை மீள கையளிக்காத குற்றத்திற்காகவே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வேறு குற்றச்சாட்டுகள் இருந்தால் அது தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார்.

கருணா அம்மான் பாவித்த 9 கோடி பெறுமதியான வாகனம் இலங்கையில் இருண்டு தான் இருக்கின்றது. இந்த நிலையில் குறித்த வாகனத்தை கருணா அம்மான் கடந்த அரசிடம் பெற்றுக் கொண்டாரா?- என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், இவருக்கு கடந்த கடந்த ஆட்சியிலேயே வாகனம் வழங்கப்பட்டது, கடந்த ஆட்சியில் ஜனாதிபதி அலுவலகத்தினால் வழங்கப்பட்ட 400 மேற்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பலரை கைது செய்தும் உள்ளோம் எனவும் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆட்சியின் போது கருணாவிற்கு பாதுகாப்புக்காக வழங்க பட்டு இருந்தால் அதனை மீண்டும் கையளித்திருக்க வேண்டும். அதேவேளை, தங்களுக்கும் அரசாங்கத்தால் வாகனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தாங்கள் விலகிச் செல்லும் போது வாகனங்களை கையளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Most Popular News