Sri Lanka

சொர்க்காபுரியாக மாறும் கொழும்பு!

கொழும்பு, இலங்கைவாழ் மக்கள் மட்டுமன்றி இவ்விந்துசமுத்திர நித்திலத்தை நோக்கிப் படையெடுக்கும் உல்லாசப்பிரயாணிகள், மற்றும் பல்வேறு தேவைநிமிர்த்தம் இங்குவந்துசேரும் அனைத்து மக்களதும் சொர்க்கபுரியாகும்.

அடுக்குமாடிக்கட்டடம்முதல் தாழ்ந்து குறுகிநிற்கும் குடிசைவரை, சீறிப்பாயும் கார்களிலிருந்து நாட்டமிகள் இழுக்கும் சில்லுவண்டிகள் வரைக்கும், ஹை ஹீல்சுகள் தாளமிட்டுச் செல்லும் அதே நடைபாதையில் ஐந்திற்கும் பத்திற்கும் அல்லல்படும் மக்களையும் கொண்டு பல்வகைமைகாட்டிநிற்கும் தலைநகரம்.

இன்று எம்தலைநகரில் காணக்கிடைக்கும், எமது கவனத்தை கட்டியீர்க்கும் காட்சிகளில் முதன்மைவகிப்பது கடந்த சில வருடங்களுக்குள் கொழும்பில் வானுயர எழுந்து நிற்கும் கட்டிடங்களும், நாள்தோறும் வளர்ச்சிபெறுகின்ற கட்டிட நிர்மாணங்களும் என்றால் மிகையில்லை.

அப்படி எதைத்தான் வானுயர கட்டிடங்களாக கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என சிந்தித்து இருக்கிறீர்களா ? அப்படியானால், கொழும்பையும் அதனை அண்டிய பகுதிகளிலும் எவ்வாறான கட்டிடங்கள் புதிதாக எழுந்துள்ளன.

அடுத்துவரும் குறுகியகாலத்தில் எவை எல்லாம் வான்தொட்டு நம் கொழும்பின் இயற்கை வனப்பை குறைத்து, செயற்கை அழகை தரப்போகின்றன என பார்க்கலாம்.

Most Popular News