Sri Lanka

பகைவர்களே ஓடுங்கள்.. புலிகள் இரண்டு வருகின்றன…!!

ஒரு வழியாக தளபதி தனது அண்ணனை சேர்த்துக் கொள்ள மனதளவில் ஆயத்தமாகி விட்டார்..!

தந்தையின் கடைசி விருப்பதை தம்பி நிறைவேற்றி விட்டார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..!

அடுத்த மாதம் நடக்க இருக்கிற திமுக செயற்குழுவில் முறைப்படி இணைப்பு இருக்கும் என்கிறார்கள். கண்கள் பனிக்க இதயம் இனிக்க இணைப்பு, அணைப்பாக இருக்கும்..!

தளபதி கலைஞர் வாழும் காலம் வரை தலைவராக இருப்பார். தளபதி செயல் தலைவராக பதவி உயர்வு பெறுவார்..!

மதுரை அண்ணன் வழக்கம் போல தென்மண்டல அமைப்புத் தலைவராக செயல் படுவார். மேலும் அவரது சகாக்கள், விசுவாசிகள் அனைவருக்கும் மீண்டும் பதவிகள் கிடைக்கும்…! இதுவரை ஓகே..!

ஆனால் இங்கு ஒரு சிக்கல் இருக்கிறது..அஞ்சாநெஞ்சனுக்கு துரோகம் செய்து விட்டு தளபதி பக்கம் சாய்ந்த முன்னாள் விசுவாசிகள் கதி…? அலறுகிறார்கள் அவர்கள்..!

அழகிரியின் பழிவாங்கும் படலத்தில் தாங்கள் என்ன கதி ஆவோம் என்று நன்றாக உணர்ந்து பீதியில் ஆழ்ந்து போய் உள்ளார்கள் என்கிறார்கள்.

ஒன்று நடக்கலாம்.. அழகிரியே சரணம் என்று நெடுஞ்சான் கிடையாக விழுந்து மீண்டும் ஒட்டிக் கொள்ள வாய்ப்புகள் அதிகம் உள்ளது…!

காரணம் அழகிரி கோபக்காரர் தான். ஆனால், முன்னாள் விசுவாசிகளை தண்டிக்கும் அளவிற்கு மோசமானவர் அல்ல என்கிறார்கள் அழகிரியை நன்கு அறிந்தவர்கள்…!

Most Popular News