Sri Lanka

இறுதி சடங்கு பணத்திற்காக மனைவியின் பிணத்தோடு வங்கி முன்பு காத்திருந்த முதியவர்

மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என கடந்த 8ம் தேதி அறிவித்தது. இதனால் கடந்த 20 நாட்களாக மக்களிடம் பணப்புழக்கம் மிகவும் குறைந்து விட்டது. தங்கள் கைவசம் வைத்திருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளபோதும், தேவைக்கு ஏற்ப பணம் எடுக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் முதியவர் ஒருவர் இறந்துபோன தனது மனைவியின் இறுதி சடங்கை நடத்த தேவையான பணத்தை வங்கியில் எடுக்க முடியால் திணறிய சம்பவம் டெல்லயில் நடந்துள்ளது.

நோடியாவில் தினக்கூலியாக வேலை பார்த்து வருபவர் முன்னி லால் (வயது 65). இவரது பூமதி. இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுட இருந்தார். நோயின் தாக்கத்தால் கடந்த திங்கட்கிழமை மரணம் அடைந்தார். மனைவியின் உடலை அடக்கம் செய்ய முன்னி லாலால் வங்கியில் பணம் எடுக்க முடியவில்லை. இதனால் மிகவும் சிரமப்பட்டு உள்ளார்.

அருகில் உள்ள வங்கியில் அவரது மூத்த மகன் கணக்கில் ரூ 16 ஆயிரம் போடப்பட்டு இருந்தது. அதனையும் எடுக்க முடியவில்லை. வங்கி அதிகாரிகளிடம் மனைவியின் இறுதி சடங்கிற்கு பணம் எடுக்க வேண்டும் என்று கெஞ்சி கூத்தாடியும் அவர்கள் நம்ப மறுத்து கொடுக்கவில்லை. இதனால் மனைவியின் உடலுடன் வங்கியின் முன்னாள் அமர்ந்து விட்டார்.

இறுதியில் அவரது மனைவியின் இறுதி சடங்கிற்கு போலீஸ் அதிகாரி ஒருவர் ரூ 2,500 மற்றும் அரசியல்வாதி ஒருவர் 5 ஆயிரம் ரூபாயும் அளித்தனர்.

இது குறித்து முன்னிலால் கூறும்போது,

வங்கியில் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்தேன். ஆனால் பணம் கிடைக்கவில்லை. நான் வங்கி ஊழியரிகளிடம் எனது மனைவியின் இறுதி சடங்கு செலவிற்கு பணம் எடுக்க வேண்டும் என கெஞ்சி கேட்டு கொண்டேன். ஆனால் யாரும் எனது வேண்டுகோளை ஏற்று கொள்ளவில்லை. நான் பொய் சொல்வதாக எண்ணினர் என்றார்.

m_11

Most Popular News