Sri Lanka

ஆனையிறவு,குறிஞ்சாதீவு உப்பளங்களை தனியாா் மயமாக்குவதற்கு எதிா்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம்

கிளிநொச்சி ஆனையிறவு மற்றும் குறிஞ்சாதீவு உப்பளங்கள் தனியாா் மயமாக்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து 01-12-2016 காலை ஆனையிறவு உப்பளத்திற்கு முன்பாக ஆா்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

காலை ஒன்பது மணிக்கு ஆனையிறவு உப்பளத்திற்கு முன்பாக ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு உப்பளங்களின் சுற்றயல் கிராம மக்கள் அமைப்புகள் இந்த ஆா்ப்பாட்டத்தை மேற்கொள்ளவுள்ளன.

ஆனையிறவு மற்றும் குறிஞ்சாத்தீவு உப்பளங்கள் தனியாரிடம் கையளிக்கப்படுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் நடைபெறுவதை அவதானிக்க முடிகிறது. எனவும் 1938 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த உப்பளங்கள், 1990 வரை மிகுந்த வினைத்திறனோடு அதிக வருமானத்தை ஈட்டியுள்ளன. ஆனையிறவு உப்பளத்தின் ஆண்டுக்கான உற்பத்தி 30 ஆயிரம் மெற்றிக்தொன்னாகவும் குறிஞ்சாத்தீவு உப்பளத்தின் ஆண்டுக்கான உற்பத்தி 40 ஆயிரம் மெற்றிக் தொன்னாகவும் இருந்துள்ளது.

ஆனால், 2016 இல் 1100 மெற்றிக் தொன் உப்பு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. இவ்விரு உப்பளங்களின் புனரமைப்புக்கு போதுமான நிதி ஒதுக்கப்படாமையே இதற்கான காரணமாகும் என தெரிவிக்கும் பிரதேச அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

எனவே மேற்படி உப்பளங்களை சுற்றியுள்ள கிராமங்களின் வாழ்வாதரத்தை வழங்கி வந்த உப்பளங்கள் தனியாா் மயப்படுவதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அதனை தொடா்ந்தும் கூட்டுத்தாபனமாக இயங்க வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுமே இந்த ஆா்ப்பாட்டத்தை மேற்கொள்ளவதாக ஏற்பாட்டாளா்கள் தெரிவித்துள்ளனா்.

Most Popular News