Sri Lanka

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனவரி முதல் அடித்தது யோகம்!

பாராளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

இந்தவகையில், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், தனது காரியாலயமொன்றைப் பேணும் பொருட்டு அதற்கான செலவாக மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.நேற்று (30) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாராளுமன்ற அமர்வுகளுக்காக வழங்கப்பட்டு வந்த நாளாந்த கொடுப்பனவு ரூபா 500 வை, 2,000 ரூபாவாக அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.குறித்த கொடுப்பனவுகள் யாவும் எதிர்வரும் 2017 ஜனவரி முதல் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Most Popular News