Sri Lanka

துமிந்தவின் முகநூலால் கிளம்பியது புது சர்ச்சை!

மரண தண்டனை கைதியாக சிறையில் உள்ள துமிந்த சில்வாவின் முகநூல் பக்கங்கள், தொடர்ந்தும் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை கைதி ஒருவர் இலங்கை சட்டப்படி வெளி உலகத்துடன் தொடர்புகளை கொண்டிருக்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், துமிந்த சில்வாவின் முகநூல் பக்கங்களில் புதிய பதிவுகள் இடம்பெற்றுவருவது சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கருத்துரைத்துள்ள சிறைச்சாலைகள் துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், துமிந்த சில்வாவின் முகநூல் பக்கங்கள் இயக்கப்படுவது குறித்து தாம் அறியவில்லை.

எனினும் அது நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே சீ.ஐ.டி இது தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular News