Sri Lanka

புகையிரதம் மற்றும் தனியார் பேருந்தும் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்!!

இன்று நள்ளிரவில் இருந்து மேற்கொள்ளப்படவிருந்த தனியார் பேருந்து சேவையாளர்களின் தொழிற்சங்க போராட்டத்தில் மாற்றங்கள் எவையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை தனியார் பேருந்து சேவையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை தனியார் பேருந்து சேவையாளர்கள் சங்கம், அனைத்து மாகாண பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தென் மாகாண தனியார் பேருந்து நிறுவனங்களின் சம்மேளனம் என்பன இணைந்து இந்த போராட்டத்தை நடத்தவுள்ளன

அதேநேரம், இந்த போராட்டத்துக்கு ஒத்துழைப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கவிருப்பதாக, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தனியார் பேருந்துகளின் போராட்டம் இடம்பெறும் பட்சத்தில், அதற்கு முகம் கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்கு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி விசேட அரச பேருந்து சேவைகள் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமுறைகளை மீறுகின்றவர்களுக்கான அபராதத் தொகை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, ஓய்வூதியத்தை இரத்து செய்தல் உட்பட 4 கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு ஆரம்பிக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பில் எவ்வித மாற்றங்களும் இல்லை என புகையிரத சேவை தொழிற்சங்க கூட்டு கூட்டணி தெரிவித்துள்ளது.

Most Popular News