Sri Lanka

கோத்தா இன்று கைது செய்யப்படுவாரா பீதியில் இனவாதிகள்?

கடந்த ஆட்சி காலத்தில் இடம்பெற்ற எவன்கார்ட் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக நீதிமன்றில் அனைத்து ஆவணங்களும் சாட்சியாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் நீதிமன்றில் தெரிவித்துள்ளதை தொடர்ந்து இன்று அவர் கைது செய்யப்படலாம் என்று நேற்று முதல் ஊடக செய்திகள் வெளிவரத்தொடங்கியுள்ளது.

நீதிமன்றில் இன்று ஆஜராகும் கோத்தபாயவிடம் இது பற்றிய விளக்கங்கள் கோரப்படலாமெனவும் கோத்தபாய உள்ளிட்ட ஏழு பேர் கடந்த மாதம் நீதிமன்றில் முன்னிலையாகி பிணையில் விடுதலை செய்வதற்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவினால் உத்தரவிடப்பட்ட நிலையில், சந்தேகநபர்கள் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் இன்றைய தினம் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவருடைய சகோதரர் மகிந்த ராஷபக்ஷ சற்று முன் நாடு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிடத்தக்கது.

Most Popular News