Sri Lanka

சாதாரண தர மாணவர்களுக்கு ஓர் முக்கிய பதிவு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்காக எதிர்வரும் சனிக்கிழமை ஆட்பதிவுத் திணைக்களம் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சாதாரண தர மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுக்க கடந்த இரண்டு வராங்களாக ஆட்பதிவுத் திணைக்களத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த காலப் பகுதியில் பெரும்பாலான மாணவர்கள் அங்கு சமூகமளித்திருந்ததாக தெரியவந்துள்ளது.

எதிர்வரும் 3-ம் திகதி சனிக்கிழமையும் மாணவர்களின் நலன் கருதி காலை 08.30 முதல் மாலை 04.30 வரை, சுகுருபாயவிலுள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தைத் திறக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Most Popular News