Sri Lanka

யாழ் வீதியில் காலை 9 மணிக்கு முடிந்த இளைஞனின் விதி!! வருட இறுதியில் இப்படி ஒரு சோகம்….

சாவகச்சேரி சப்பச்சிமாவடி வீதியில் மோட்டார் சைக்களில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் மீது பட்ட மரம் முறிந்து வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று காலை 9 மணிக்கு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பூநகரியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றும் குறித்த இளைஞன் வேலைக்கு சென்றுகொண்டிருக்கும் போதே துக்ககரமான இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இதில் சப்பச்சிமாவடி சங்கத்தானையை சேர்ந்த சச்சிதானந்தன் கயந்தன் வயது27 என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இளைஞனின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.jaffna-dath

jaffna-dath01

jaffna-dath02

Most Popular News