Sri Lanka

கிளிநொச்சியின் ஒரு பகுதியில் ஆபத்தான கட்டம்!! மக்களை மீட்க விசேட திட்டம்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் ஊற்றுப்புலம் கிராமத்தில் அமைந்துள்ள, ஒடுக்கு பாலத்திற்கு பதிலாக நிரந்தர பாலம் அமைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு கின்ற நிலையில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஊற்றுப்புலம் ஒடுக்கு பாலத்தின் ஊடாக போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாய நிலை தோன்றியுள்ளது.

இப் பகுதி பொது மக்களின் தடையற்ற போக்குவரத்திற்கு மாற்று ஏற்பாடாக தற்காலிகமாக மண் அணைகளினால் அமைக்கப்பட்டு போக்குவரத்து இலகுவாக்கப்பட்டு இருந்தது.

தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாலமும், மண் அணையும் உடைக்கப்படும் அபாய நிலையில் இருக்கின்றது.

இந்த பாலம் உடைப்பெடுக்கும் பட்சத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் கிளிநொச்சியின் ஏனைய பிரதேசங்களுடனான தொடா்புகளுடன் துண்டிக்கப்பட்டு தனித் தீவுக்குள் இருப்பது போன்ற நிலை ஏற்படும்.

இந்த நிலைமைகளை தவிர்க்கும் வகையில் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் கார்த்திகேயன் ஆகியோர் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டு, படகு போக்குவரத்தை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. kele01 kele02

Most Popular News