Sri Lanka

சிக்கலில் சிக்கிய பொலிஸ் மா அதிபர்!

இரத்தினப்புரி நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பொலிஸ் மா அதிபருக்கு வந்த தொலைபேசி அழைப்பொன்றுக்கு அவர் பதிலளித்த விதம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் அவரின் தொலைபேசி உரையாடல் தொடர்பாக இன்றைய தினம் பாராளுமன்றத்திலும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மா அதிபர் நடந்துக்கொண்ட விதம் தவறானதே என தெரிவித்துள்ளார்.

நேற்று இரத்தினப்புரி பகுதியில் நடைபெற்ற பொலிஸ் தின நிகழ்வொன்றில் பொலிஸ் மா அதிபர் கலந்துகொண்டிருந்த போது அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புக்கு அவர் பதிலளிக்கும் அவர் கதைப்பது அங்கிருந்த ஒலிவாங்கி மூலம் வெளியில் கேட்டுள்ளது.

குட் மோர்னிங் சேர் .. அவசர விடயமா சேர்.. நிலமேஸ் மேட்டர் அது கொஞ்சம் நேரத்தில் எனக்கு கிடைக்கும். நான் வந்து சேரை சந்திக்கின்றேன்.

நிச்சயமாக கைது செய்யப்பட மாட்டார். நான் அதனை தெளிவாக ரிடைக்கடருக்கு தெரிவித்துள்ளேன்.

என்னிடம் கேட்காது கைது செய்ய வேண்டாமென தெரிவித்துள்னன். சரி சேர்” என அவர் அந்த தொலைபேசி அழைப்புக்கு பதிலளித்துள்ளார்.

Most Popular News