Sri Lanka

அனைவருக்கும் அவதான எச்சரிக்கை!! நாட்டில் இன்று நள்ளிரவு முதல் இடம்பெறவுள்ள விடயம்..

தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பில் அதிகாரிகளால் இதுவரையில் உரிய பதில் எதுவும் வழங்கப்படவில்லை என்று தனியார் பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் இன்று நள்ளிரவு முதல் திட்டமிட்டபடி தனியார் பேருந்து சேவையாளர்களின் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமுறைகளை மீறுகின்றவர்களுக்கான அபராதத் தொகை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.

அகில இலங்கை தனியார் பேருந்து சேவையாளர்கள் சங்கம், அனைத்து மாகாண பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தென் மாகாண தனியார் பேருந்து நிறுவனங்களின் சம்மேளனம் என்பன இணைந்து இந்த போராட்டத்தை நடத்தவுள்ளன.

அதேநேரம், இந்த போராட்டத்துக்கு ஒத்துழைப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கவிருப்பதாக, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தனியார் பேருந்துகளின் போராட்டம் இடம்பெறும் பட்சத்தில், அதற்கு முகம் கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதன்படி விசேட அரச பேருந்து சேவைகள் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular News