Sri Lanka

பாகிஸ்தானை தொடர்ந்து இலங்கைக்கும் மரண அடி கொடுத்து வீழ்த்திய இந்திய பெண்கள் அணி !!

பெண்களுக்கான ஆசிய கோப்பை டி.20 தொடரில் இந்திய பெண்கள் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

தாய்லாந்தின் பாங்காங் நகரில் பெண்களுக்கான ஆசிய டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி இலங்கையை எதிர்கொண்டது.

இதில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. மிதிலி ராஜ்ஜின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 20ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்தது.

அதனை தொடர்ந்து 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால், இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 69 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Most Popular News