Sri Lanka

பசுவிற்கு வலிக்கும் என்பதற்காக பால் கறக்காமலா இருக்கிறோம்..!!

தமிழர்கள் பாரம்பரியமாக விளையாடி வரும் ஜல்லிகட்டுக்கு சுப்ரீம் கோர்ட் கடந்த 2014ம் ஆண்டு தடை விதித்து தீர்ப்பு அளித்தது.

தமிழக அரசின் வற்புறுத்தலால் மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த கடந்த ஜனவரி 8ம் தேதி அனுமதி வழங்கி அறிவிக்கை வெளியிட்டது.

ஆனால் விலங்குள் நல வாரிய சங்கங்களின் கூட்டமைப்புகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை ஏற்று சுப்ரீம் கோர்ட் ஜனவரி 14ம் தேதி ஜல்லிகட்டுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடந்தது.

அப்போது ஜல்லிக்கட்டுக்கு நாங்கள் தடை விதிக்கும்போது அறிவிக்கை மூலம் எப்படி அனுமதி வழங்கலாம் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும் போது, ஜல்லிக்கட்டு விஷயத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு எதையும் மத்திய அரசு மீறவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு சில நிபந்தைகளுடன் ஜல்லிகட்டு நடத்த அனுமதி அளித்ததாக தெரிவித்தார்.

மேலும் ஜல்லிகட்டு என்பது ரேசோ அல்லது பொழுது போக்கு விளையாட்டோ அல்ல என்று கூறிய அவர் கிராம மக்கள் கொண்டாடும் திருவிழாக்கால விளையாட்டு என்று குறிப்பிட்டார்.

காளைகளுக்கு தேவையில்லாத துன்பத்தை ஜல்லிகட்டு தருவதாக கூறி தடை விதிகப்பட்டுள்ளது.

அப்படி பார்த்தால் பால் கறப்பது கூட பசுக்களுக்கு துன்பம்தான். அதை நாம் தேவைக்காக செய்கிறோம். அதே போல ஜல்லிக்கட்டையும் கருதலாம் என வாதிட்டார். இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும் 8ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Most Popular News