Sri Lanka

நான் திருடவில்லை பதறுகிறார் கோட்டாபய

தனது மகன் அரசாங்க நிதியில் அமெரிக்காவில் வசித்து வருவதாக, வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்த கருத்தை தான் வன்மையாக கண்டிப்பதாக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் ஊடகங்களை சந்தித்த வேளையே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த அரசாங்கம் ஜனவரி 8 ஆட்சிக்கு வந்ததாக சுட்டிக்காட்டிய அவர், ஜனவரி 9 முதல் மங்கள சமரவீர பொய் பிரச்சாரங்களை மேற்கொள்ள ஆரம்பித்து விட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

முதலில் கோட்டாபய ராஜபக்ஷவால் சதி செய்யப்படுவதாக பொய் பிரச்சாரம் செய்த மங்கள, தற்போது தொடர்ந்தும் தன்னால் இயன்றளவு பொய்களை சொல்லிக் கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் 18 பில்லியன் அமெரிக்க டொலர்களை துபாயிலுள்ள வங்கிக் கணக்கொன்றில் வைத்திருப்பதாக பொய் கூறிய மங்கள சமரவீரவால், தற்போது தனது பிள்ளைக்கு எதிராக குற்றம் சுமத்தப்படுவதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது மேலும் கூறினார்.

கீழ்தரமான அரசியல் நோக்கங்களை ஈடுசெய்ய இது போன்ற பிரச்சாரங்களை மேற்கொள்வது இவ்வாறான அமைச்சர்களுக்கு உகந்ததல்ல எனவும் கோட்டாபய சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை வரலாற்றில் மிகவும் பலவீனமான வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆவார்.

என்ன செய்தாலும் இறுதியில் என்னிடம் தான் ஓடிவர நேரிடும். இதற்கு முன்னரும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இணைவதற்காக அவர் ஓடி வந்தார்.

அதேபோல் எதிர்காலத்திலும் ஓடி வர நேடிடும் என கோட்டாபாய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Most Popular News