Sri Lanka

தே. மு.தி.க. வில் இருந்து விலகுகிறார் விஜயகாந்!!

என்னங்க பாஸ்….அதிர்ச்சியா இருக்குதா..! அப்படிதான் நேற்று முகநூல் மற்றும் வாட்ஸ் ஆப் களில் இதுதான் மேட்டர்..

மக்கள் பொங்கித் தள்ளிட்டாங்க..சரி என்ன விஷயம்னு தெரிஞ்சுக்கலாம்னு கொஞ்சம் தோண்ட ஆரம்பிச்சா கெக்கே பிக்கே அயிட்டம்..!

அதாவது ஒரு வார இதழ்ல திமுகவின் தலைவர் கருணாநிதியா ஸ்டாலினானு கேப்டன் கேட்கிறார்னு ஒரு அன்பர் கேள்வி கேக்குறாரு..

அதுக்கு அந்த பத்திரிகை, தேமுதிகவின் தலைவர் விஜயகாந்தா அல்லது பிரேமலதாவா..இத யாரவது கேப்டனிடம் கேளுங்கனு பதில் எழுதிட்டாங்க..!

அவ்வளவு தான் முக நூல் போராளிங்க பொங்கித தள்ளிட்டாங்க..! வாட்ஸ் ஆப்..பேஸ்புக் முழுக்க கேப்டன் கட்சியில் இருந்து விலகுகிறார்னு ஒரே அலப்பறை..!!

பாவம்பா கேப்டன்..அவரே நொந்து போயி இருக்காரு..அவரை வச்சு இப்பவுமா காமெடி பண்றீங்க…!!

Most Popular News