Sri Lanka

லோட்டஸ் வீதி மூடல்!

கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போக்குவரத்து பொலிஸார் இதனை தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டி சாரதிகள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

Most Popular News