Sri Lanka

தென்னாபிரிக்காவின் பங்களிப்பை கோரும் சம்பந்தன்

தென்னாபிரிக்கா, இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தென் ஆபிரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ரொபினா மார்க்ஸ் (Robina Marks) மற்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போதே இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளில் தென்னாபிரிக்காவின் வகிபங்கு தொடர்பில் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம், தற்போதைய அரசியல் சூழ்நிலைகள், மற்றும் சமாதானம் குறித்தும் இந்த சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

சுமார் ஒருமணி நேரம் வரை நீடித்த இந்த சந்திப்பில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Most Popular News