Sri Lanka

ஜனாதிபதியை சந்தித்த ஆயர்கள்

பல நூற்றாண்டுகளாக ஒருவர் மற்றவரின் கருத்துக்கள், கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை மதிக்கும் நல்லிணக்க சூழலைக்கொண்ட ஸ்ரீலங்காவில் 11 ஆவது ஆசிய ஆயர் பேரவை நடைபெறுவது மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை நீர்கொழும்பில் நடைபெறும் 11 ஆவது ஆசிய ஆயர் பேரவையில் பங்குபற்றும் ஆயர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் இடையில் நேற்று பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய ஆயர் பேரவையின் தற்போதையத் தலைவர் பேராயர் கர்தினால் Oswald Cardinal Gracias ஓஸ்வால்ட் கார்டினல் கிரேசியஸ் மற்றும் பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பேராயர் Archbishop Pierri Nquyen Van Tot ஆர்ச் பிஷோப் பியறி குவன்வியன் வொற்ஸ் அவர்களும் ஸ்ரீலங்காவை பிரதிநிதித்துவப்படுத்தி பேராயர் கர்தினால் மெல்கம் ரன்ஜித் அவர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

17 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆயர்களும் கனடா, ஸ்பெயின், போலந்து, பிரான்ஸ், இத்தாலி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைப் பிரிநிதித்துவப்படுத்தி 140 க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் ஜனாதிபதியுடனான இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி மாளிகைக்கு வருகைதந்த பிரதிநிதிகளை ஜனாதிபதி வரவேற்றதுடன், கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

வறுமையை ஒழிப்பதற்காக கத்தோலிக்க தேவாலயங்களினூடாக மேற்கொள்ளப்படும் பங்களிப்பினைப் இதன்போது பாராட்டிய ஜனாதிபதி, கஷ்டமான சந்தர்ப்பங்களின்போது தனக்கு பேராயர் மெல்கம் ரன்ஜித் அவர்கள் வழங்கிய ஆலோசனைகளுக்கு ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்தார்.

இலங்கையில் எந்தப் பகுதிக்கு சென்றாலும் அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் புண்ணியஸ்தலங்களை கண்டுகொள்ள முடியும் என்றும் மாநாட்டின் பின்னர் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் இலங்கையை சுற்றிப்பார்த்து இயற்கை எழிலை அனுபவிக்கும்படியும் ஜனாதிபதி பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார்.

இச்சந்திப்பின் போது இலங்கையின் கலாசாரத்தை எடுத்துக்காட்டும் ஒரு கலாசார நிகழ்வும் இடம்பெற்றதுடன், இந்த நிகழ்வை நினைவுகூறும் வகையில் ஜனாதிபதி அவர்களினால் பிரதிநிதிகளுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ஜோன் அமரதுங்க, நிமல் சிறிபால டி சில்வா, எஸ்.பி.நாவின்ன, பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.ajr

Most Popular News