Sri Lanka

கனடாவின் ரொறொன்ரோ மறுகுழு பலாலியில் பரிசிலுடன்!

கனடாவின் ரொறொன்ரோ நகரையும் யாழ். நகரையும் இணைப்பதற்கான உத்தியோகபூர்வான உடன்படிக்கை யாழ்.பொது நூலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சம்பிரதாயூர்வமாக கைச்சாத்திடப்பட்டது.

கனடா ரொறொன்ரோ மாநகரசபைக்கும் யாழ்.மாநகரசபைக்குமிடையேயான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ரொறொன்ரோ மாநகரசபை முதல்வர் ஜோன் ரொறி மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் , யாழ்.மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் ஆகியோர் இணைந்து ஒப்பந்தத்தினில் கைச்சாத்திட்டுள்ளனனர்.
யாழ்.மாவட்டத்தின் கல்வி மற்றும் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் உரையாற்றிய ரொறொன்ரோ நகர முதல்வர் ஜேனர் ரொறி, இலங்கைக்கு வெளியில் அதிகளவான ஈழத் தமிழ் மக்கள் ஒன்றுகூடி வாழும் இடமாக ரொறன்ரோ இருக்கின்றது. எனவே, கனடாவின் உதவி எப்போதும் கிடைக்குமென உறுதியளித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தினையும் ரொறொன்ரோவையும் இணைப்பதற்கு என்னென்ன எண்ணங்கள் இருக்கின்றன என்பது பற்றியும் அங்கு கலந்துரையாடப்பட்டது.

பொருளாதார விருத்திக்கு புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் பங்களிப்பு கட்டாயம் கிடைக்கும் என்றும் எதிர்காலத்தில் யாழ்.மாவட்டத்தின்பொருளாதாரத்தினை மேம்படுத்த கனடா அரசாங்கம் உதவிகளை மேற்கொள்ளுமென்றும் இதன்போது உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வருகை தந்த கனேடிய வர்த்தக குழு யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மகேஸ்சேனநாயக்கவினை பலாலி தளத்தினில் சந்தித்து உரையாடியிருந்தது.நிலத்தடி கீழான இராணுவ கட்டளை மையத்திலிருந்து விடுதலைப்புலிகளின் ஆட்லறி தாக்குதல்கள் மத்தியினில் எதிராக முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளினை அவர் விளக்கிகூறியிருந்ததுடன் நினைவு பரிசில்களையும் வழங்கியிருந்தார்.

Most Popular News