Sri Lanka

மட்டக்களப்பு அரச உத்தியோகஸ்தர்களுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல்!

காணி சீர்த்திருத்த ஆணையாளர் மீதான சம்பவத்தை தொடர்ந்து பல்வேறுபட்ட கோணங்களில் பொலிசார் விசாரணையை மேற்கொண்டுவருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு சீர்த்திருத்த ஆணையாளர் நேசகுமார் விமலராஜ் மீதான துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு 25 நாட்கள் கடந்த நிலையிலும் இதுவரையில் எவரும் கைது செய்யப்பட்டவில்லை.
கடந்த மாதம் 22ம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இதுவரைக்கும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்பட்ட வில்லையென பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணை நடைபெற்றுவருகின்றதாக பொலிசார் கூறியுள்ளனர்.

Most Popular News