Sri Lanka

மட்டக்களப்பில் தந்தை, மகளின் உயிரை காவு கொண்ட விபத்து!

வாகரையில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தை, மகள்ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை முச்சக்கர வண்டி ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள், திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு பெண், சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டதுடன்,

இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Most Popular News