Sri Lanka

யார் மீது பிழை… இளையராஜா ….? எஸ்.பி.பி…?

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் தன் நீண்ட நாளைய நண்பர் இளையராஜாவிடமிருந்து இதை எதிர் பார்த்தே இருந்திருக்கமாட்டார்.

ஆனால், தன்னையறியாமல் இந்த சர்ச்சையின் துவக்கமாக பாடகர் எஸ்.பி.பியே இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது.

இளையராஜா இதுநாள் வரை எஸ்.பி.பி சென்று வந்துள்ள, பங்கெடுத்த எந்த மேடை கச்சேரிகளுக்கும் காப்புரிமையோ, தன்னிடம் அனுமதி வாங்கி தன் பாடல்களை பாட வேண்டும் என்றோ கேட்டதில்லை.

தற்போது கேட்டதற்கு காரணம் -எஸ்.பி.பி யிடமிருந்தே ஆரம்பிக்கிறது என்பது தான் உண்மை.

இது இளையராஜா தரப்பு வைத்திருக்கும் காரணம் இதோ

இளையராஜா ஒரு மேடை கச்சேரியை ஒப்புக்கொள்ள முடிவுசெய்திருக்கிறார். அதற்கு எஸ்.பி.பி கேட்ட தொகை ஒரு கோடிக்கும் மேலயாம்.

இளையராஜா, ஏதோ எஸ்.பி.பி சும்மா கலாட்டா பண்றாருன்னு,’யோவ், நீ 10 லட்சம் தானே வெளியில வாங்குறே. அதுக்கும் மேல கொஞ்சம் கேளுய்யா, இதென்ன மொத்த நிகழ்ச்சி பட்ஜெட்டையே கேக்குறே?” என்று எஸ்.எம்.எஸ் பண்ணி இருக்கிறார்.

அதுக்கு எஸ்.பி.பி உண்மையாகவே இவ்வளவு கொடுத்தா, வரேன்ன்னு சொல்லவும் தான், கொஞ்சம் இளையராஜாவுக்கு டென்ஷன் ஆகி இருக்கிறது.

வரலைன்னு சொல்லி இருந்தா கூட பரவாயில்லை. இப்படி எஸ்.பி.பி பண்றது சரியில்லைன்னு வருத்தப்பட்டு விட்டுவிட்டார்.

இந்த நோட்டீஸ் சென்றபோதும், நேற்றும் இளையராஜா சென்னையில் இல்லை. திருவண்ணாமலை சென்றுவிட்டார்.

இப்படி நடவெடிக்கை எடுத்தது அவரின் ஆபீஸ் நிர்வாகம். அதற்கு ஒப்புதல் கேட்டதும் சரி என்று சொல்லிவிட்டார். எஸ்.பி.பி மேல நோட்டீஸ் தரப்படவில்லை. அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்துக்கே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அத்தோடு,  இளையராஜா அவர்களின் பதிலுக்கு அவரை தொடர்புகொண்டபோது, அவரின் குடும்பத்தினர், ‘அப்பா, சென்னையில் இல்லை. அப்பா இங்கே இருந்தாலும் இது குறித்து பதில் சொல்ல விரும்ப மாட்டார். எஸ்.பி.பி அங்கிள் இப்படி கேட்டது, செய்தி அனுப்பியது அப்பாவின் மொபைலில் உள்ளது’ என்று பதில் தந்துள்ளனர்.

Most Popular News