Sri Lanka

மைத்திரிக்கும் ரணிலுக்கும் கோர்ட் ஓடர்

மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை எதிர்வரும் ஜூலை மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சி இன்றைய தினம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன மற்றும் அப்போதைய எதிர்க்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரது கையொப்பங்களை பயன்படுத்தி போலி உடன்படிக்கையை தயாரித்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மீது தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்தபோதே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டில் சாட்சியாளர்களான ஜனாதிபதியையும், பிரதமரையும் இன்றைய தினம் பிரசன்னமாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீதி மன்றுக்கு முன்னிலையாக முடியாத நிலை காணப்படுவதாக அவர்கள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், குறித்த வழக்கின் மற்றுமொரு சாட்சியாளரான ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் கபீர் ஹாசிம் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Most Popular News