Sri Lanka

நடிகை பியூமியுடன் வந்தவர்கள் யார்?

கிரிபத்கொடை உணவகமொன்றில் கடந்த தினம் இடம்பெற்ற மோதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 4 பேர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 15ம் திகதி இரவு பிரபல நடிகை பியூமி ஹங்சமாலியுடன் வந்த குழுவினர் ஊடகங்கள் சிலவற்றின் உறுப்பினர்கள் குழுவொன்றை தாக்கிய சம்பவம் பதிவாகியிருந்தது.

குறித்த மோதலுடன் தொடர்புடையவர்கள் என குற்றம்சுமத்தப்பட்டுள்ளவர்கள் 4 பேரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் நால்வரும் நாளைய தினம் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Most Popular News