Sri Lanka

மரண வீட்டில் வெட்டுக்குத்து! – மட்டக்களப்பில் பதறவைக்கும் சம்பவம்

மட்டக்களப்பு – ஆரயம்பதி கர்பலா பிரதேசத்தில் மரண வீடொன்றில் ஏற்பட்ட மோதலில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் உட்பட 07 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டில் உயிரிழந்த பெண்ணொருவரிடன் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த நிலையில் , இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள வந்த அவரின் மகன்கள், பேரப்பிள்ளைகளுக்கிடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

உயிரிழந்த பெண்ணின் மரணம் சந்தேகத்துக்குரியது என ஒரு தரப்பினர் கூறிய காரணத்தால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கடும் காயங்களுக்கு உள்ளானவர்கள் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , ஆபத்தான நிலையில் உள்ள ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Most Popular News