Sri Lanka

தடுப்பு முகாமிலிருந்து நால்வர் தப்பியோட்டம்

தடுப்பு முகாமிலிருந்த, நான்கு வெளிநாட்டு பிரஜைகள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பொறுப்பிலிருந்த, மிரிஹான தடுப்பு முகாமிலிருந்த வௌிநாட்டவர்கள் நால்வர் தப்பியோடியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தப்பியோடியவர்களில் இரு நைஜீரிய பிரஜைகள், துருக்கி பிரஜை மற்றும் மாலைதீவுப் பிரஜை ஒருவர், உள்ளிட்ட நான்கு பேரே இவ்வாறு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தப்பி சென்றவர்கள் குறித்த விசாரணைகளை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Most Popular News