Sri Lanka

பிரச்சினைகள் நிறைந்த சோகமான நாடா இலங்கை…?

இலங்கையில் அனைத்து வளங்களும் இருந்தாலும் , சுற்றுலாத்க் தளங்கள் நிறைந்து கிடந்தாலும் பிரச்சினைகளும் சோகங்களும் மக்கள் மத்தியில் நிறைந்திருப்பதனால் என்னமோ இலங்கை மகிழ்வற்ற நாடாக இருக்கின்றது.

இலங்கை மகிழ்ச்சி குறைந்துவரும் நாடாகியுள்ளதாக உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் 2017 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

155 நாடுகளைக் கொண்ட இந்த பட்டியில் இலங்கை 120 ஆவது இடத்தில் உள்ளதாக அந்தப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆய்வானது 2014 முதல் 2016 ஆம் ஆண்டுகாலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மக்கள் ஏன் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள்? எந்தளவு மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்பதை அடிப்படையாகக்கொண்டு உலக மகிழ்ச்சிய அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

இந்த அறிக்கையில் 2016 ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 117 ஆவது இடத்தில் இருந்துள்ளது.

இந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் மூன்று இடங்கள் பின்னோக்கிச் சென்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மகிழ்ச்சி தினமான மார்ச் 20 ஐ முன்னிட்டு இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலாம் இடத்தில் நோர்வே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Popular News