Sri Lanka

புதிய கட்டிடங்கள் கட்டப்படுவதை தடுப்பதற்கான புதிய ஒழுங்குவிதி.!

மின் கடத்தும் வடங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு இடையில் இருக்க வேண்டிய குறைந்த பட்ச இடைவெளி தொடர்பான புதிய ஒழுங்குவிதியை இலங்கை அறிமுகப்படுத்துகின்றது. இந்த ஒழுங்குவிதி மூலம் நுகர்வோர்கள் மற்றும் சொத்துகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

இந்த ஒழுங்குவிதிகளானவை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு இணங்க, மின் சக்தி மற்றும் வலு அமைச்சரால் அனுமதிக்கப்பட்டன. இவை 2016ம் ஆண்டில் வெளியிடப்பட்ட மின்சார ஒழுங்குவிதிகளின் 30, 36 மற்றும் 37ம் பிரிவுகளில் குறித்துரைக்கப்பட்டுள்ளன.

மின்சாரத்தை தலைக்குமேலாக கொண்டு செல்லும் வடங்களின் சொந்தக்காரர்கள் அல்லது இயக்குபவர்களிடமிருந்து (Ceylon Electricity Board or Lanka Electricity Company (Private) Limited) ஒரு பாதுகாப்புச் சான்றிதழினை, புதிய கட்டிடத்தின் கட்டுமானமானது பெற வேண்டும் என்பதை இந்த புதிய ஒழுங்குவிதி விளக்குகின்றது. குறித்த கட்டிடத்திற்கும் மின் வடங்களுக்குமான குறித்த இடைவெளியானது, ஒழுங்குவிதியில் குறிப்பிடப்பட்டதற்கு அமைய இல்லாது போயின், பாதுகாப்புச் சான்றிதழ் வழங்கப்படாது. அது வழங்கப்படாதவிடத்து குறித்த கட்டிடத்தை கட்ட முடியாது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான அமைச்சு ஆகியவை இந்த ஒழுங்குவிதிகளை அமுற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. அதற்கமைய, அபிவிருத்தி நோக்கங்களுக்கான அனுமதி வழங்கப்படுகையில் இந்த ஒழுங்குவிதியானது உறுதியாக கவனிக்கபடும். உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளரால் அனைத்து மாகாண சபைகளும் புதிய கட்டிடங்களுக்கு அனுமதியளிக்கையில் இந்த ஒழுங்குவிதியை பின்பற்ற வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளன. கட்டுமான அனுமதிக்கான விண்ணப்பமானது மின்சாரத்தை கொண்டு செல்லும் வடங்கள் மற்றும் கட்டத் திட்டமிடப்பட்டுள்ள கட்டிடம் ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளி பற்றிய விபரங்களைக் கோரலாம்.

கட்டிடங்கள் அல்லது கட்டமைப்புகளுக்கும் தலைக்கு மேற் செல்லும் மின் வடங்களுக்குமான இடைவெளி (Reg 36, 37)

எந்தவொரு கட்டிடம் அல்லது கட்டமைப்பு ஆகியவற்றுக்கும் மின்கடத்தியைக் கொண்டுள்ள மின் வடங்களுக்கும் இடையிலான ஆக்க்குறைந்த இடைவெளியானது, காற்றின் வீச்சுக்காரணமாக கீழ்க்குறிப்பிட்டவாறு மாறுபடலாம்.

சாதாரண மின்னழுத்தம் நிலைக்குத்தான இடைவெளி (Vertical Distance) கிடையான இடைவெளி (Horizontal Distance)

1000 வோல்ட்களைத் தாண்டாத நிலை 2.40 m 1.50 m

1000 வோல்ட்களைத் தாண்டி, ஆனால் 11,000 வோல்ட்களை தாண்டாத நிலை 2.70 m 1.50 m

11,000 வோல்ட்களைத் தாண்டி, ஆனால் 33,000 வோல்ட்களை தாண்டாத நிலை 3.00 m 2.00 m

33,000 வோல்ட்களைத் தாண்டி, ஆனால் 132,000 வோல்ட்களை தாண்டாத நிலை 4.10 m 4.10 m

132,000 வோல்ட்களைத் தாண்டி, ஆனால் 220,000 வோல்ட்களை தாண்டாத நிலை 5.18 m 5.18 m

நிலத்திற்கு மேலான உயரம் மற்றும் வீதிக்கு மேலாக அல்லது வீதியுடன் அமைந்த தலைக்கு மேற் செல்லும் மின் வடம் ஆகியவற்றுக்கான எல்லைகளையும் இந்த ஒழுங்குவிதி குறிக்கின்றது.

தரைக்கு மேலான மின் வடங்களின் உயரம் (Regu 30)

சாதாரண மின்னழுத்தம் வீதிக்கு மேலாக வீதியுடன் அமைந்த வாகன நெரிசலுக்கு அணுகக்கூடிய பிற அமைவிடங்களுக்கு மேலாக வாகன நெரிசலுக்கு அணுக முடியாத பிற அமைவிடங்களுக்கு மேலாக

1000 வோல்ட்களைத் தாண்டாத நிலை 5.5 m 4.9 m 4.9 m 4.6 m

1000 வோல்ட்களைத் தாண்டி, ஆனால் 11,000 வோல்ட்களை தாண்டாத நிலை 6.1 m 5.2 m 5.2 m 4.6 m

11,000 வோல்ட்களைத் தாண்டி, ஆனால் 33,000 வோல்ட்களை தாண்டாத நிலை 6.4 m 6.1 m 6.1 m 4.9 m

33,000 வோல்ட்களைத் தாண்டி, ஆனால் 132,000 வோல்ட்களை தாண்டாத நிலை 6.7 m 6.7 m 6.7 m 6.7 m

132,000 வோல்ட்களைத் தாண்டி, ஆனால் 220,000 வோல்ட்களை தாண்டாத நிலை 7.0 m 7.0 m 7.0 m 7.0 m

ஒழுங்கு விதியை பார்வையிடுவதற்கான இணைப்பு: http://www.pucsl.gov.lk/english/wp-content/uploads/2016/09/Continuity.pdf

Most Popular News