Sri Lanka

போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் இலங்கையில் அமைக்கப்படமாட்டாது : சபையில் பிரதமர்

சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடன் போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் இலங்கையில் உருவாக்கப்படமாட்டாதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எனவே எவரும் அது குறித்து அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. போர்க்குற்ற விசாரணைகள் அரசாங்கத்தின் கொள்கையுமல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்ததார்.

கலப்பு நீதிமன்றம், வெளிநாட்டு நீதிபதிகள் கோரிக்கைக்கு இணங்கவில்லை

கலப்பு நீதிமன்றத்திற்கோ அல்லது வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பையோ நாட்டில் அனுமதிப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் ஒருபோதும் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அனுமதிக்க ஒத்துக்கொண்டிருந்தால் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக போர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற வாய்ப்பு இருந்திருக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதா என்பது குறித்து ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் இதனைக் கூறினார்.

ஐ.நாவில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் 2015ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பகுதிகளையும் பிரதமர் இன்று நாடாளுமன்றத்தில் ஒவ்வொன்றாக வாசித்துக்காண்பித்தார்.

வெளிநாட்டு நீதிபதிகளை அழைப்பதாக அதில் கூறப்பட்டிருக்கவில்லை என்றும், உள்ளகப் பொறிமுறைக்காக வெளிநாட்டவர்களின் ஆலோசனைகளைப் பெறுவதற்கே ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் அல் ஹுசைனின் அறிக்கையிலேயே சர்தேச நீதிபதிகள் மற்றும் கலப்பு நீதிமன்றம் போன்ற பரிந்துரைகள் காணப்பட்டுள்ளன என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

“முன்னாள் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் நியூளோர்க் நகருக்குச் சென்று வழக்குத் தொடர்வதற்கு சம்மதம் தெரிவித்துக்கொண்டனர். பீல்ட் மார்ஷலை இழுத்துச் சென்று அதன் ஓரங்கமாகவே கூண்டித் அடைத்தனர். பின்னர் அப்போதிருந்த வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் 2014ஆம் ஆண்டு ஜெனீவா சென்று, மூதூர், திருகோணமலை போன்ற விவகாரங்களுக்கு வழக்கு தொடர்வதாக என்று கூறியிருந்தார்.

ஆனால் எமது பிரதிநிதிக்ள அப்படி செய்யவில்லை. 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு நாங்கள் ஆதரவு அளிக்கின்றோம். ஆனால் ஆனால் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை ஆராய்ந்த பின்னரே அறிவிப்போம். சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்திற்கு ஒருபோதும் நாங்கள் இணங்கப்போதில்லை. ஜனாதிபதியும் இதனைக் கூறியிருந்தார். சபையில் நான் இன்றும் இதனைக் கூறுகின்றேன்.

கடந்த ஆட்சியாளர்கள் சுமத்தியிருக்கும் கடன் அளவுப் பிரச்சினையையும், வழக்கு தொடர்வதாக கூறி ஏற்படுத்திய சுமையையும் தீர்க்கவேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம். ஸ்ரீலங்கா உள்ளக நீதிமன்றப் பொறிமுறையை அமைக்கும் அதிகாரம் அரசியலமைப்புக்கும், நாடாளுமன்றத்திற்குமே உள்ளது. இவ்வாறு எல்லாம் செய்தவர்கள் இன்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் மன்னிப்புகோருவதற்குத் தயாரா? யார் வெள்ளைகொடி வழக்கு தொடர்ந்தது? யார் இந்த நிலைமையை உருவாக்கியது?”

Most Popular News