Sri Lanka

“தேர்தல் குறித்து இலங்கை அரசாங்கத்துக்கு எவ்வித அச்சமும் இல்லை”

இந்த வருடத்துக்குள் மூன்று மகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் கட்டாயம் இடம்பெறும். தேர்தல் குறித்து அரசாங்கத்துக்கு எவ்வித அச்சமும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளரும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சில் நேற்று மகாணங்களுக்கான மீனவ அமைப்புகளுக்கான சம்மேளத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Most Popular News