Sri Lanka

கணவனைக் கொன்று ‘சூட்கேஸில்’ அடைத்த மனைவி: மனதை பதறவைக்கும் சம்பவம்

இந்தியாவின் பஞ்சாப்பில் கணவனொருவர் தனது மனைவியால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் எகம் சிங் தில்லான், அவரது மனைவி சீரத் தில்லனுடன் தனியாக வசித்து வந்தார்.

கடந்த 19ம் திகதி தன்னுடைய கணவனை கொன்று சூட்கேஸில் அடைத்து அருகிலுள்ள பி.எம்.டபிள்யூ காரில் மறைத்துவிட்டு அங்கிருந்து தப்பிஓடிவிட்டார்.

தன் மகன் கொல்லப்பட்டதாக கூறி எகம் சிங்கின் தந்தை ஜஸ்பால் சிங் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.இது தொடர்பாக சீரத்தை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், சீரத் மொஹாலி காவல் நிலையத்தில் தன்னுடைய கணவரை கொன்றாக ஒப்புக்கொண்டு சரணடைந்தார்.

இது தொடர்பாக அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: கடந்த சில வருடங்களாக என்னுடைய கணவருடன் வேதனை வாழ்க்கையை வாழ்ந்து வந்தேன். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நான், என்னுடைய சகோதரர் வினய் பிரதாப் சிங் பிரார் மற்றும் பிராரின் நண்பருடன் இணைந்து கணவரை எகம்மை கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றேன். அவரது உடலை ஒரு சூட்கேஸில் அடைத்து வீட்டருகில் இருந்த பி.எம்.டபிள்யூ காரில் மறைத்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

கணவனின் தொடர்ச்சியான உடல், உள ரீதியான துன்புறுத்தலே கொலைக்கான பிரதான காரணமென தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கணவன் வேலைக்குச் செல்லாதபோதும் ஆடம்பர வாழ்வை வாழ்ந்து வந்ததாகவும் சீரத் தெரிவித்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சீரத், அவரது தாய் ஜஸ்விந்தர் கவுர், சகோதரர் வினய் பிரதாப் சிங் பிரார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Most Popular News