Sri Lanka

8 நாடுகளின் விமானிகள், இலத்திரனியல் சாதனங்களை எடுத்துச் செல்ல அமெரிக்கா தடை விதித்துள்ளது

அமெரிக்க அரசாங்கம் 8 மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க நாடுகளிலிருந்து வரும் விமானங்களில் விமானிகள்,பயணிகள் தங்களுடன் விமானத்திற்குள் எடுத்துச் செல்லும் பைகளில் மடிக்கணனி மற்றும் டேப்லட் போன்ற இலத்திரனியல் மின் சாதன பொருட்களை எடுத்துச் செல்வதற்கு தடை விதித்துள்ளது.

இந்த அமெரிக்க அரசாங்கத்தின் நடவடிக்கையால் 10 விமான நிலையங்களில் இயங்கும் ஒன்பது விமான சேவைகளை பாதிக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெளிநாடுகளில் உள்ள உளவுத் துறையால் சேகரிக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதில் குறிப்பாக இலத்திரனியல் சாதனங்களான மடிக்கணினி, டேப்லட்ஸ், கேமராக்கள், டிவிடி சாதனம் மற்றும் இலத்திரனியல் விளையாட்டுப் பொருட்கள் ஆகியவை அடங்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் கையடக்க தொலைப்பேசி மற்றும் ஸ்மார்ட்ஃபோன் தொலைப்பேசிகளை தாங்கள் கொண்டு செல்லலாம் அதற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் , உள்நாட்டு பாதுகாப்பு துறை, இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது; ஆனால் இன்று செவ்வாய்க்கிழமையன்று இதற்கான அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய தடை கடந்த சில வாரங்களாகவே பரிசீலனையில் இருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Most Popular News