Sri Lanka

பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் நடத்துவதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது

பிரித்தானியாவில் பொது தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் தெரீசா மே நேற்று அறிவித்தமைக்குநாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த முடிவிற்கு 522 உறுப்பினர்கள் ஆதரவும், 13 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.தொழிற்கட்சி மற்றும் லிபரல் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால், மூன்றில் இரண்டு பங்கிற்கும் மேற்பட்ட ஆதரவுகள் கிடைத்துள்ளன.

தேர்தல் மூலம் பெறப்படும் புதிய ஆணை, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளிவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் தனக்குள்ள அதிகாரத்தை வலுப்படுத்தும், மேலும் எதிர்காலத்திற்கு அது நிச்சயமான ஒரு சூழலை வழங்கும் என பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொது தேர்தல் முடிவை வரவேற்றுள்ள எதிர்கட்சி தலைவர் ஜெர்மி கார்பன், பிரதமர் தெரீசா மே அடிக்கடி தனது மனதை மாற்றிக் கொள்வதாகவும் வாக்குறுதிகளை மீறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அடுத்த பொது தேர்தல் 2020 ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டும் ஆனால், குறிப்பிட்ட கால நாடாளுமன்ற சட்டத்தின் படி மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் தேர்தலை விரும்பும் நேரத்தில் முன்னதாகவும் நடத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular News